இந்தியா
இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 01.01.2026

அணைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் போனஸ் வழங்க முதலமைச்சர் உத்தரவு.
- நாடு முழுதும் உள்ள கோயில்களில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
- பிரபுதேவா நடிக்கும் “மூன்வாக்“ திரைப்படத்தில் நடிகர் ஆகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்.
- இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.40 குறைந்து கிராம் ரூ.12440க்கும் சவரன் ரூ.99520க்கும் விற்பனை ஆகிறது.
- இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.1 குறைந்து கிராம் ரூ.258க்கும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.258000க்கும் விற்பனை ஆகிறது.
- மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு வழக்கு பட்டியல் தயார் செய்தல் மற்றும் விசாரணை ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்படும் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்.
- காய்ச்சல் மற்றும் வலி நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படும் நிமுசுலைட் என்ற மருந்தை ஓன்றிய சுகாதார அமைச்சகம் தடை செய்திருக்கிறது.
