சினிமா செய்திகள்
தாமரை – பாவனி இடையே அடிதடி சண்டையா? அதிர்ச்சியில் பிக்பாஸ் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் தாமரை மற்றும் பாவனி ரெட்டி இடையே அடிதடி சண்டை வந்தது போன்ற காட்சியின் புரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக தாமரை மிகவும் ஆவேசமாக பேசி வருகிறார் என்பதும் அவர் ஒவ்வொருவராக சண்டை போட்டு வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்றைய டாஸ்கின்போது போட்டியாளர்களிடையே சில வாக்குவாதங்கள் நடைபெற்றன. குறிப்பாக பாவனி மற்றும் தாமரை இடையே ஆரம்பித்த வாக்குவாதம் திடீரென கைகலப்பாக மாறி உள்ளது போல் தெரிகிறது. இதனால் பிக்பாஸ் வீடே ஒரே ரணகளம் ஆகிவிட்டது போல் தெரிகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் அடுத்தவார கேப்டன் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே முதல் இரண்டு புரோமோவில் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்ட காட்சிகள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் வீட்டில் உள்ள இரண்டு பெண் போட்டியாளர்களுக்கு இடையே கைகலப்பு நடந்தது போல் தெரிய வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
#Day33 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/orLtnXvO2S
— Vijay Television (@vijaytelevision) November 5, 2021