சினிமா செய்திகள்
’மாநாடு’ படத்தின் பிரபலத்தை ‘பத்து தல’ படத்திலும் இணைத்த சிம்பு!

சிம்பு நடித்த ’மாநாடு’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் அந்த படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவரை தனது அடுத்த படமான ‘பத்து தல’ படத்திற்கும் சிம்பு அழைத்து வந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
’மாநாடு’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று திறமையான எடிட்டிங் என்பதும் இதனை அடுத்து அந்த படத்தின் எடிட்டர் பிரவீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ’மாநாடு’ படத்தில் டைம்லூப் கதையை பாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் மிக திறமையாக அவர் எடிட்டிங் செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தது.
இந்த நிலையில் சிம்பு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘பத்து தல’ திரைப்படத்திலும் பிரவீன் கே.எல். தான் எடிட்டர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநாடு திரைப்படத்தில் மிக சிறப்பாக அவர் எடிட்டிங் பணியை செய்ததை அடுத்து சிம்புவின் அடுத்த படத்திற்கும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் இருவரும் இணைந்து நடித்து வரும் இந்த படத்தை கிருஷ்ணா என்பவர் இயக்கி வருகிறார் என்றதும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மார்ச் முதல் வாரம் சென்னையில் தொடங்க இருப்பதாகவும் இதில் சிம்பு உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.


















