சினிமா செய்திகள்
பெற்றோர்கள் என்னை வீட்டிலேயே சிறை வைத்தனர் – பிரியா வாரியர்!

ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் கண் அடித்து ஓவர் நைட்டில் உலகப்புகழ் பெற்ற பிரியா பிரகாஷ் வாரியரை, அவரது பெற்றோர் வீட்டிலேயே சிறை வைத்ததாக தெரிவித்துள்ளார்.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில், ஒரு அடார் லவ் விரைவில் திரைக்கு வருகிறது. மேலும், தெலுங்கில் இதே படம் லவ்வர்ஸ் டே என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.
தெலுங்கு படத்தை புரமோட் செய்வதற்காக ஐதராபாத் சென்ற நடிகை பிரியா வாரியர், மேடையில் பேசியபோது, அந்த ஒரு கண்ணடிக்கும் காட்சி இப்படி வைரலாகும் என நினைக்கவில்லை. அப்போது சில நாட்கள் எனது பெற்றோர்கள் வெளியே விடாமல் என்னை வீட்டிலேயே சிறை வைத்தனர்.
பல பத்திரிகைக்காரர்கள், மீடியாக்கள் மற்றும் ரசிகர்கள் என் வீட்டை கும்பல் கும்பலாக சூழ்ந்து கொண்ட போது தான் அந்த காட்சியின் சென்ஷேசன் புரிந்தது என்றார்.
மேலும், இவர் நடிப்பில் விரைவில் ஸ்ரீதேவி பங்களா திரைப்படமும் வெளிவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.










