வணிகம்
ஜூன் 30 முதல் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது? பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகம் குறித்த வதந்திக்கு PIB விளக்கம்!
Published
2 நாட்கள் agoon
By
Poovizhi
சமூக ஊடகங்களில் சமீபமாக பரவி வரும் ஒரு தகவல் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2026 ஜூன் 30 முதல் தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்று, அவற்றுக்கு பதிலாக பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்பட்டது.
இந்த தகவல் வேகமாகப் பரவிய நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகத்தின் (PIB) உண்மை கண்டறியும் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) தளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ஜூன் 30, 2026 முதல் காகித நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டு பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்படும்” என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள காகித ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எந்தத் திட்டமும் இந்திய ரிசர்வ் வங்கியிடம் இல்லை என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
பொதுவாக புதிய வடிவமைப்பில் அல்லது புதிய தொழில்நுட்பத்துடன் ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள நோட்டுகள் உடனடியாக செல்லாததாக அறிவிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட காலம் வரை பழைய மற்றும் புதிய நோட்டுகள் இரண்டும் ஒரே நேரத்தில் புழக்கத்தில் இருக்கும் என்பது நடைமுறையாகும்.
இதனால், சமூக ஊடகங்களில் பரவும் இதுபோன்ற சரிபார்க்கப்படாத தகவல்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று PIB வலியுறுத்தியுள்ளது. மேலும், உண்மைத் தன்மை உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பகிர்வதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

You may like

PM Free Mobile Yojana: பெண்கள், மாணவர்களுக்கு இலவச மொபைல்? சமூக ஊடகங்களில் பரவும் தகவல் உண்மையா? மத்திய அரசு விளக்கம்!

ரூ.500 நோட்டுகள் செல்லாது எனும் வதந்தி தவறு: ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தல்!

விரைவில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியீடு – சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் வரும் புதிய நோட்டுகள்



















