வணிகம்
ரூ.500 நோட்டுகள் செல்லாது எனும் வதந்தி தவறு: ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தல்!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
ரூ.500 நோட்டுகள் செல்லாது என்ற வதந்தி தவறானது என்பதை மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக மறுத்துள்ளன.
சமூக ஊடகங்கள் மற்றும் வாட்ஸ்அப்பில் “2025 செப்டம்பர் மாதத்துக்குள் ரூ.500 நோட்டுகள் செல்லாது” என பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என PIB (Press Information Bureau) தனது உண்மைச் சோதனை பிரிவின் மூலம் தெரிவித்துள்ளது.
இந்த வதந்தியால் பொதுமக்கள் குழப்பமடைய வேண்டிய அவசியம் இல்லையெனவும், தற்போது ரூ.500 நோட்டுகள் முறையாகவே செல்லுபடியாக உள்ளன எனவும் மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், சிறிய மதிப்பு நோட்டுகளை அதிகரிக்கவே ரிசர்வ் வங்கி ஏடிஎம்களுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இது தவிர ரூ.500 நோட்டுகளை ரத்து செய்ய எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
அதனால், சமூக வலைதளங்களில் வரும் தவறான செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டும் மதிக்க வேண்டும் எனவும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.




