வணிகம்
விரைவில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியீடு – சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பத்துடன் வரும் புதிய நோட்டுகள்

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது புதிய அறிவிப்பில், விரைவில் புதிய ரூ.20 நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்த புதிய நோட்டுகளில், அண்மையில் நியமிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. சஞ்சய் மல்ஹோத்ராவின் கையொப்பம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ரூ.20 நோட்டுகளின் வடிவமைப்பு தற்போது பயன்பாட்டில் உள்ள நோட்டுகளின் வடிவத்தையே பேணிக் கொண்டிருக்கும். இது குறித்து, ரிசர்வ் வங்கி சட்டத்தின் பிரிவு 26(2)க்கு உட்பட்டு, RBI வெளியிடும் அனைத்து நாணயங்களும் மற்றும் நோட்டுகளும் சட்டபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியவை எனவும் RBI தெரிவித்துள்ளது.
மேலும், இந்த புதிய நோட்டுகள் புழக்கத்தில் வருகிறபோதும், பழைய ரூ.20 நோட்டுகளும் தொடர்ந்தும் செல்லுபடியாக இருக்கும். எனவே பொதுமக்கள் எந்தவிதமான பதட்டத்திலும் இருக்க வேண்டியதில்லை என்றும் RBI அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.















