இந்தியா
பாம்பை மூக்கின் வழியாக விட்டு வாயில் எடுக்கும் முதியவர் – அதிர்ச்சி வீடியோ

விஜய் நடித்த துப்பாக்கி திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜம்வால். சூர்யா நடித்த அஞ்சான் படத்திலும் நடித்தார். இவர் ஒரு அதிர்ச்சியான வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் முதியவர் ஒருவர் ஒரு சிறிய பாம்பை தனது மூக்கினுள் விட்டு, வாயின் வாழியாக வெளியே எடுக்கிறார். அவரின் செயலால் பாம்பு துடிதுடிக்கிறது. ஆனால், அவர் அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை. அதை பெரிய சாகசம் போல நினைத்துக்கொண்டு அவர் அதை செய்கிறார்.
இதை பார்த்த நெட்டிசன்கள் அந்த முதியவரை கண்டபடி திட்டி வருகின்றனர். ஒரு உயிரினத்தை இப்படி துன்புறுத்தக்கூடாது என பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை 25,65,709 பேர் பார்த்துள்ளனர்.
View this post on Instagram





















