Connect with us

உலகம்

மடியில் ஊர்ந்து செல்லும் மலைப்பாம்பு.. அசால்ட்டாக மொபைல் பார்க்கும் இளம்பெண்..!

Published

on

செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் எப்போதும் மனிதர்கள் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் நாய்கள், பூனைகள், பறவைகள் உள்பட பல செல்ல பிராணிகளை வீட்டில் வளர்த்து வருவார்கள் என்பதும் தெரிந்ததே. ஒரு சிலர் வித்தியாசமாக சிறுத்தைகள், சிங்கங்கள், புலிகள் போன்ற விலங்குகளையும் பாதுகாப்புடன் செல்லப்பிராணிகளாக வளர்த்து வருவார்கள் என்றும் உடும்புகளை கூட செல்ல பிராணிகளாக வளர்த்தவர்களின் செய்திகள் வெளியானது என்பது தெரிந்ததே.

இருப்பினும் வனவிலகங்களை செல்ல பிராணிகளாக வளர்க்க சட்டம் அங்கீகரிக்கவில்லை என்பதால் அவற்றுக்கென்ன தனியாக ஒரு இடம் வைத்து செல்ல பிராணிகளை வளர்த்து வருபவர்கள் அரிதாக காணப்படுவது ஒன்றுமில்லை. இந்த நிலையில் பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று கூறப்படும் நிலையில் ஒரு இளம் பெண் ஒரு ராட்சத பாம்பை செல்ல பிராணி ஆக வளர்த்து வரும் வீடியோ இணைய தளங்களில் வைரல் ஆகிறது.

விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும் சரி, சாதாரண தண்ணீர் பாம்பாக இருந்தாலும் சரி, பாம்பு என்றாலே குழந்தைகள் பெரியவர்கள் வரை ஒருவித அச்சத்துடனே பார்ப்பார்கள் என்பதும் பாம்பை செல்லப்பிராணியாக வளர்ப்பது குறித்து யாருக்குமே எந்த விதமான ஐடியாவும் வராது என்பது குறிப்பிடத்தக்கது. பாம்பின் பெயரை சொன்னாலே பதட்டத்தையும் பயத்தையும் ஏற்படுத்தும் நிலையில் இளம்பெண் ஒருவர் மிகப்பெரிய மலைப்பாம்பை தனது செல்லப் பிரயாணியாக வளர்த்து வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து வைரலாகும் வீடியோ ஒன்றில் ஒரு பெண் தனது கைகளில் மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது ஒரு மிகப்பெரிய மலைப்பாம்பு அவருடைய மடியில் ஊர்ந்து செல்கிறது. அந்த மலைப்பாம்பின் தலை இந்த வீடியோவில் தெரியவில்லை என்றாலும் அந்த மலைப்பாம்பு அந்த பெண்ணின் மடியில் குறுக்குமறுக்குமாக செல்லும் காட்சி அந்த வீடியோவில் உள்ளது.

இந்த பாம்பு உலகின் மிகப்பெரிய மலைப்பாம்புகளில் ஒன்றாக இருக்கும் என்பது அந்த வீடியோவில் இருந்து தெரிய வருவதை அடுத்து இவ்வளவு பெரிய பாம்பை அந்த இளம் பெண் எப்படி செல்ல பிராணியாக வளர்த்து வருகிறார் என்ற கேள்வியும் எழுகிறது. ஒரு மலைப்பாம்பை ஒரு இளம் பெண் செல்லப்பிராணியாக வளர்ப்பது என்பது சாத்தியமே இல்லை என்றும் இது கிராபிக்ஸ் தொழில்நுட்பத்துடன் செய்யப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என்று ஒரு சிலர் சந்தேகத்தை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் போது கிராபிக்ஸ் மாதிரி தெரியவில்லை என்று அந்த மலைப்பாம்பை சிறிய வயது முதல் அந்த இளம் பெண் வளர்த்து வந்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர். நம்ப முடியாததாகவும் அதே நேரத்தில் இந்த வீடியோவை பார்த்தவுடன் நம்பத் தகுந்ததாக இருப்பதால் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மலை பாம்பை செல்லப்பிராணியாக ஒரு இளம் பெண் வளர்க்க வாய்ப்பு இருக்கிறதா? என்பதை கமெண்ட் பகுதியில் உங்கள் கருத்தை தெரிவிக்கவும்.

author avatar
seithichurul
இந்தியா2 மணி நேரங்கள் ago

நிதி ஆயோக் கூட்டத்தில் மம்தா பானர்ஜி மைக் ஆஃப்! கடுப்புடன் வெளியேறினார்!

தினபலன்8 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் : சனிக்கிழமை (27-07-2024)

விமர்சனம்18 மணி நேரங்கள் ago

ராயன் திரை விமர்சனம் | Raayan – Movie Review

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

ஆடி கிருத்திகைக்கு திருத்தணி முருகன் கோயில் கட்டணச் சலுகை!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

சங்கடஹர சதுர்த்தி: தேனியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்!

கிரிக்கெட்22 மணி நேரங்கள் ago

IND vs SL 2024: முதல் T20-ல் மழை இல்லை, வானிலை சாதகமாக உள்ளது!

சினிமா22 மணி நேரங்கள் ago

ரஜினிகாந்த்: பேரனுக்காக ஒரு அன்பான தாத்தா!

செய்திகள்22 மணி நேரங்கள் ago

வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம்: இன்ஸ்டாகிராம் ஸ்டைல் மென்ஷன் வசதி!

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் ஊற்றுவது ஏன்? – ஒரு விரிவான பார்வை

ஆன்மீகம்23 மணி நேரங்கள் ago

வீட்டில் பணம் தங்கவில்லையா? லட்சுமி கடாக்ஷம் பெறுங்கள்!

பல்சுவை5 நாட்கள் ago

“கேரளா ஸ்டைல் கடலை கறி: சுவையான மற்றும் சத்தான குழம்பு”!

வணிகம்4 நாட்கள் ago

மின்னல் வேகத்தில் குறையும் தங்கம் விலை (23/07/2024)!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலையில் மாற்றமில்லை (21/07/2024)!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆடி பௌர்ணமி சிறப்புகள் என்ன?

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

3,789 கிராம அஞ்சல் பணியாளர் பணியிடங்கள்: தமிழ்நாட்டில் அபார வாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

திடீர் எனச் சரிந்து வரும் தங்கம் விலை (24/07/2024)!

வணிகம்4 நாட்கள் ago

பட்ஜெட் 2024-25-இல் ஸ்டார்ட்அப்-களுக்கு அடித்த ஜாக்பாட்!

வணிகம்4 நாட்கள் ago

2024 பட்ஜெட்: விலை குறையும், அதிகரிக்கும் பொருட்கள்

வணிகம்6 நாட்கள் ago

தினமும் 14 மணிநேர வேலைக்கு அனுமதி கேட்கும் ஐடி நிறுவனங்கள்.. கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!