Connect with us

தமிழ்நாடு

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மனைவி காலமானார்!

Published

on

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி சற்றுமுன் மாரடைப்பால் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் துணை முதல்வரும் தற்போதைய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி அவர்களின் மறைவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஓபிஎஸ் அவர்களின் குடும்பத்தினருக்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட அனைத்து அரசியல் கட்சி பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pifteau henri biolinker.