தமிழ்நாடு
நிவர் புயல் எதிரொலி.. சாலைகளில் உள்ள தடுப்பு பதாகைகள் நீக்க உத்தரவு!

நிவர் புயல் எதிரொலியாகச் சாலைகளில் உள்ள விளம்பர பதாகைகளை நீக்கச் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் மும்பையில் ஏற்பட்ட புயலின் போது சாலைகளில் வைக்கப்பட்டு இருந்த பாதாகைகள் கீழே விழுந்து பல விபத்துகளை ஏற்படுத்தி இருந்தது.
அதுபோல ஒரு சூழல் சென்னையில் நடைபெற்றுவிடக் கூடாது என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சென்னை மாநகராட்சி, அடுத்த 2 மணி நேரத்தில் சாலைகளில் உள்ள அணைத்து பதாகைகளையும் நீக்க உத்தரவிட்டுள்ளது என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்பரம்பாக்கம் ஏரி திறக்கப்படுவதால், அடையாறு ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் 2000 குடும்பங்களை, நிவாரண முகாம்களுக்கு மாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
சென்னை மட்டுமல்லாமல் கடலோர மாவட்டங்களில் சாலைகளில் உள்ள பதாகைகளை நீக்க உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.



















