சினிமா
இந்தியா இலங்கை கூட்டுத் தயாரிப்பில் ஒரு புதிய தமிழ்த் திரைப்படம்…

தமிழ் ஈழத்தின் கடற்புறத்து வாழ்வியல் கதையாக உருவாகும் ”அந்தோணி” திரைப்படம்தான் இப்போது இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் உருவாகி விரைவில் வெள்ளித் திரைக்கு வரவிருக்கும் படமாகும்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் படப்பிடிப்புகள் நடைபெறவிருக்கும் இப்படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் ஆகிய இரு நண்பர்கள் இணைந்து இயக்குகின்றனர்.
கயல் வின்சென்ட் மற்றும் காதலிக்க நேரமில்லை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த டி.ஜே.பானு ஆகியோர் நடிக்கும் இப்படத்தை ”மணல்” என்கிற திரைப்படத்தில் சர்வதேச விருது வென்ற ஒளிப்பதிவாளர் ரிஷிசெல்வம் ஒளிப்பதிவு செய்ய இலங்கை நடிகர்களான சுதர்சன், ரவீந்திரன், சௌமி போன்றோரும் நடிக்கிறார்கள்.



