சினிமா
இந்த வார OTT ரிலீஸ்கள்: புது படங்கள், புதிய தொடர்கள் – எந்த தளத்தில் எதை பார்க்கலாம்?

இந்த வாரம் ஒடிடி (OTT) தளங்களில் பல புதிய படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாகவுள்ளன. நெட்ஃப்ளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், டெண்ட்கொட்டா, ஆஹா மற்றும் ப்ரைம் வீடியோ போன்ற தளங்கள் வழியாக வெளிவரவுள்ள படங்களின் பட்டியலை இங்கே பார்ப்போம்.
இந்த வார OTT வெளியீடுகள் – முக்கிய படங்கள்:
டெஸ்ட் (Test)
நடிகர் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் தமிழில் வெளியாகிறது.மர்மர் (Marmar)
முன்னதாக திரையரங்கில் வெளியான இப்படம், டெண்ட்கொட்டா தளத்தில் நாளை முதல் தமிழில் வெளியாகும்.கடைசி தோட்டா (Kadaisi Thotta)
ராதாரவி, ஸ்ரீஜா, ஸ்ரீகுமார் நடித்துள்ள இப்படமும் டெண்ட்கொட்டா தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.லவ் யாப்பா (Love Yappa)
லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக். இந்தப் படம் நாளை முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகிறது.
புதிய தொடர்கள்:
ஹோம் டவுன் (Home Town)
நகைச்சுவை மற்றும் குடும்பத் பின்னணியில் உருவாகிய இந்த தெலுங்கு தொடர் ஆஹா தளத்தில் வெளியாகிறது.டச் மீ நாட் (Touch Me Not)
நவ்தீப் நடித்துள்ள இந்த தெலுங்கு தொடர் ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
பல்வேறு மொழிகளில் வெளியாகும் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்:
| பெயர் | மொழி | தளம் |
|---|---|---|
| தி கேம்பினோஸ் | மலையாளம் | சிம்ப்ளி சவுத் |
| கர்மா | கொரியன் | நெட்ஃப்ளிக்ஸ் |
| ப்ரில்லியண்ட் மைண்ட்ஸ் | ஆங்கிலம் | ஹாட்ஸ்டார் |
| கதா சுதா | ஹிந்தி | நெட்ஃப்ளிக்ஸ் & ஹாட்ஸ்டார் |
| ஏ ரியல் பெயின் | ஆங்கிலம் | ஹாட்ஸ்டார் |
| பல்ஸ் | ஆங்கிலம் | நெட்ஃப்ளிக்ஸ் |
| பர்சனல் நான் க்ராட்டா | ஜெர்மன் | ப்ரைம் வீடியோ |
| யுனிவர்சல் லாங்குவேஜ் | ஃப்ரெஞ்ச் | பிஎம்எஸ் |
| சமக் சீசன் 2 | இந்தி | சோனி லிவ் |
| தி பாண்ட்ஸ் மேன் | ஆங்கிலம் | ப்ரைம் வீடியோ |
| கில் டு கில் & ஆர் பி கில்ட் | ஆங்கிலம் | நெட்ஃப்ளிக்ஸ் |
| ஜார்ஜி மேண்டி ஃபர்ஸ்ட் மேரேஜ் | ஆங்கிலம் | ஹாட்ஸ்டார் |
| ஹைப்பர் நைஃப் சீசன் 1 | கொரியன் | ஹாட்ஸ்டார் |
| கர்னாச்சாஸ் க்ளோரியஸ் ஸ்ட்ரீட் ஃபுட் | ஸ்பேனிஷ் | நெட்ஃப்ளிக்ஸ் |



