சினிமா
செல்வராகவனின் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா நடித்த ’நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தின் ரிலீஸ் தேதி அவ்வப்போது தாமதமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஐந்து ஆண்டுகள் கழித்து தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. செல்வராகவனின் ’நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் வரும் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றும் செல்வராகவனின் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட இடைவேளைக்குப்பின் செல்வராகவனின் திரைப்படம் ஒன்று வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எஸ்ஜே சூர்யா ஜோடியாக ரெஜினா மற்றும் நந்திதா ஸ்வேதா நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய வேடத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில் இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது.
அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் பிரசன்னா படத்தொகுப்பில் உருவான இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படம் வரும் மார்ச் 5ஆம் தேதி திரையரங்குகளில் தான் ரிலீஸாகும் என்றும் அதனை அடுத்து ஒரு மாதம் கழித்து ஓடிடியிலும் ரிலீஸாகும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ’சாணிக் காகிதம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி விட்டது என்றும் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.