சினிமா
இந்த வித்தியாசம் கூட போலீசுக்கு தெரியாதா? ஆபாச படத்தால் கைது செய்யப்பட்ட நடிகை ஆவேசம்!

நடிகை கெஹனா வசிஸ்த் என்பவர் ஆபாச படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஆபாச படங்களுக்கும் கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய படங்களுக்கும் உள்ள வித்தியாசம் கூட தெரியாமல் மும்பை போலீசார் கைது செய்துள்ளதாக குறிப்பிட்டு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் வெளியான ’பேய்கள் ஜாக்கிரதை’ உள்ளிட்ட ஒரு சில படங்களிலும், பல ஹிந்தி திரைப்படங்கள் மட்டும் டிவி சீரியல்களிலும் நடித்தவர் கெஹனா வசிஸ்த். இவர் சொந்தமாக ஒரு இணையதளம் ஒன்றை தொடங்கி அதில் ஆபாச படங்களை பதிவேற்றியதாகவும் அந்த படங்களை பார்ப்பதற்கு ரூ.2000 அவர் கட்டணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த இணையதளத்தில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த இணையதளத்திற்கு சப்ஸ்கிரைப்பர்கள் அதிக அளவில் வந்ததால் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவிந்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் மும்பை போலீசார் நடிகை கெஹனா வசிஸ்த்தாவை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவருடைய இணையதளத்தில் 87 ஆபாச வீடியோக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த இணையதளத்தின் மூலம் அவருக்கு சுமார் 36 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து கெஹனா வசிஸ்த் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் நடிகை கெஹனா வசிஸ்த் லீகல் டீம் இது குறித்து கூறிய போது ஆபாச வீடியோக்களுக்கும், கிளர்ச்சி ஏற்படுத்தக்கூடிய வீடியோக்களுக்கும் சட்டரீதியில் வேறுபாடு உள்ளது. மும்பை போலீசார் இந்த வித்தியாசம் கூட தெரியாமல் கைது செய்திருக்கிறார்கள் என்றும் அவர் நிரபராதி என நிரூபித்து விரைவில் அவரை வெளியே கொண்டு வருவோம் என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது