இந்தியா
நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை, உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு அடுத்த ஆண்டு அதாவது 2022ஆம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு வைத்தல், விற்பனை ஆகியவை செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. பிளாஸ்டிக் பைகளுக்கான தடிமன் 75 மைக்ரான் என்ற அளவுக்கு மேல் இருக்க வேண்டும் என்றும் செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் இது கட்டாயம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளின் தடிமன் அளவு 150 மைக்ரான் ஆக தற்போது உயர்த்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தை பொருத்தவரை ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை அமலில் உள்ளது என்பது தெரிந்ததே. இருப்பினும் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் நீதிமன்றம் செல்லவும் வாய்ப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.





















