சினிமா செய்திகள்
ஆண்ட்ரியா, விஜய்சேதுபதியின் அசத்தல் காட்சிகள்: ‘பிசாசு 2’ டீசர்

ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.
ஒரு நிமிடம் மட்டுமே உள்ள இந்த டீசர் முழுக்க முழுக்க திகில் காட்சிகளை உள்ளன. குறிப்பாக ஆண்ட்ரியா மற்றும் விஜய் சேதுபதி காட்சிகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது
இந்த டீசரின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் விஜய்சேதுபதி கவுரவ வேடத்திலும் சந்தோஷ் பிரதாப் மற்றும் பூர்ணா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா இசையமைத்து உள்ளார்