கிரிக்கெட்
ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை: சென்னையை தொடரும் துரதிஷ்டம்1

நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி கடைசி பந்தில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. ஏற்கனவே சென்னை அணி மும்பையிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் ஒரு சில போட்டிகளில் தோல்வி அடைந்த நிலையில் நேற்றும் அந்த துரதிர்ஷ்டம் தொடர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் அடித்தது. அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 72 ரன்களும் மொயின் அலி 58 ரன்களும் டுபிளஸ்சிஸ் 50 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 219 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டீகாக் மற்றும் ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். அதன் பிறகு களமிறங்கிய பொல்லார்டு அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே அடிக்க வேண்டிய நிலையில் அவர் இரண்டு ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தததால் மும்பை அணி ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் பொல்லார்டு ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.
நேற்றைய போட்டியில் சென்னை அணி தோல்வி அடைந்தாலும் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















