கிரிக்கெட்
அம்பத்தி ராயுடு அதிரடி: மும்பைக்கு 219 இலக்கு!

இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் அம்பத்தி ராயுடுவின் அதிரடி ஆட்டம் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது தொடக்க ஆட்டக்கார் ருதுராஜ் 4 ரன்களில் அவுட் ஆனாலும் டூபிளஸ்சிஸ் அதிரடியாக 50 ரன்களும் மொயீன் அலி 58 ரன்களும் எடுத்தனர்.
அதன் பின் களமிறங்கிய அம்பத்தி ராயுடு 27 பந்துகளில் 72 ரன்கள் அடித்தார். அதில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜடேஜா 22 பந்துகளில் 22 ரன்கள் அடித்து உள்ளார்.
இந்த நிலையில் 219 என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை அணியின் ரோகித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், க்ருணால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, பொல்லார்டு ஆகிய 6 பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த இலக்கை எட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.








