இந்தியா
இன்றைய வேலைநீக்க செய்தி.. இந்தியாவின் மொபைல் செயலி நிறுவனத்தில் 30% பேர் வேலை காலி..!

தினந்தோறும் இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள நிறுவனங்களில் இருந்து வேலைநீக்க செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் கூகுள் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் இரண்டாவது கட்ட வேலை நீக்க அறிவிப்பையும் வெளியிட்டு வருகின்றன என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இந்தியாவில் உள்ள மொபைல் செயலி நிறுவனங்களில் ஒன்றான டுகான் என்ற நிறுவனம் தனது நிறுவனத்தில் பணிபுரிந்த 30 சதவீத ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மொபைல் செயலி நிறுவனமான டுகான் ஏற்கனவே ஆறு மாதங்களுக்கு முன் வேலை நீக்க நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது மீண்டும் 30% ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் சில்லறை தொழில்நுட்ப தளத்தில் தங்கள் பிராண்டுகளை அதிகரிக்க கவனம் செலுத்த இருப்பதாகவும் அது மட்டும் இன்றி நிறுவனத்தின் வருமானம் குறைந்து உள்ளதால் பணி நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

dukaan
கலந்த 2020 ஆம் ஆண்டு சுமித்ஷா மற்றும் சுபாஷ் சவுத்ரி ஆகியோரால் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் சரக்கு மேலாண்மை, விளம்பரங்கள், விற்பனை மற்றும் நாடு முழுவதும் உள்ள விற்பனையாளர்களுக்கான விநியோகம் ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக செயல்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு செப்டம்பரில், டூகான் ஷேர்சேட் மற்றும் மோஜ் உடன் இணைந்து, அதன் தளத்தில் உள்ள வணிகர்கள் ஷேர்சேட் மற்றும் மோஜ்-இல் இருக்கும் படைப்பாளர்களுடன் இணைந்து தங்கள் தயாரிப்புகளை வீடியோ மற்றும் நேரடி உள்ளடக்கம் மூலம் விளம்பரப்படுத்த உதவியது.
டூகான் நிறுவனம் ஆன்லைன் ஸ்டோரை 30 வினாடிகளுக்குள் தொடங்க உதவுகிறது. தயாரிப்புகள், சரக்குகள், சந்தைப்படுத்தல், பணம் செலுத்துதல் மற்றும் தளவாடங்களை நிர்வகித்தல் போன்ற அனைத்தையும் டூகான் கையாள்கிறது. ஆடைகள், நகைகள் அல்லது தளபாடங்களை விற்க விரும்பினாலும், இணையவழியில் டூகான் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.