தமிழ்நாடு
கழுவுற மீனில் நழுவற மீன் ரஜினி.. ஜெயக்குமார் விமர்சனம்!

சபரிமலையில் பெண்கள் செல்ல அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பினை வெளியிடத்தை அடுத்துக் கேரளாவில் மிகப் பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

அது குறித்து ஆன்மீக வழியில் அரசியல் கட்சி தொடங்க இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கருத்துத் தெரிவித்த போது “பெண்களுக்கு அனைத்து விவகாரங்களிலும் சம உரிமை வழங்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேநேரத்தில், கோயில் என்று கூறும்போது ஒவ்வொன்றுக்கும் ஒரு சடங்கு இருக்கும். காலங்காலமாகப் பின்பற்றப்பட்டுவரும் ஐதீகம் இருக்கும். அதில் தலையிடக்கூடாது என்பது எனது கருத்து. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதேநேரத்தில் மதச் சம்பந்தப்பட்ட விஷயங்கள், சடங்குகளைப் பார்த்துச் செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இதனை விமர்சித்த அமைச்சர் ஜெயக்குமார் ‘சபரிமலை விவகாரத்தில் கழுவுற மீனில் நழுவுற மீனாக ரஜினி கருத்துக் கூறியுள்ளார் ’ என்று கூறியுள்ளார்.
















