தமிழ்நாடு
ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கிற்கு எவ்வளவு செலவானது.. ஆர்டிஐ பதில் என்ன தெரியுமா?

சென்னை: மதுரையை சேர்ந்த சையது தமீம் என்பவர் இந்த மரணம் தொடர்பான பல முக்கிய ஆதரங்களை வெளியே கொண்டு வந்துள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சில முக்கிய ஆதாரங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வந்துள்ளார்.
அதன்படி ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்தார். அதே நாளில் மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. இவரது மருத்துவ செலவிற்காக அரசு பணம் எதுவும் கொடுக்கவில்லை.

ஆனால் இவரது இறுதிச்சடங்கிற்கு மொத்தம் 99 லட்சத்து 83 ஆயிரத்து 586 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது அரசு சார்பாக செய்யப்பட்ட செலவு ஆகும்.
முதல்வர் என்ற முறையில் இந்த செலவு அரசு சார்பாக செய்யப்பட்டுள்ளது என்று பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.





















