தமிழ்நாடு
தமிழ் சினிமாவில் விபச்சாரம்: நடவடிக்கை எடுக்க மோடி, ஸ்டாலினுக்கு மீராமிதுன் கோரிக்கை!

தமிழ் சினிமாவில் விபச்சாரம் அதிகமாகி விட்டதாகவும் பெண்களுக்கு அதிக தொல்லைகள் கொடுக்கப்பட்டதாகவும் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை மீரா மிதுன், பிரதமர் மோடி மற்றும் முக ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பட்டியலின மக்கள் குறித்து சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த நிலையில் புதிய வீடியோ ஒன்றை நடிகை மீரா மிதுன், தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் நான் இந்தியாவிலேயே சூப்பர் மாடல், நடிகை, தொழிலதிபருமான நான், பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். எனது பெயரை கெடுக்கும் வேலைகள் நிறைய உள்ளது. தமிழ் சினிமா விபச்சார கூடமாக உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். தமிழ் பெண்ணாக நான் பல சவால்களை சந்தித்து வருகிறேன். நான் சினிமா துறையில் நிறைய பிரச்சினைகளை சந்திக்கிறேன். தமிழ் பெண்களுக்கு வன்கொடுமைகள் அதிகமாக நடைபெறுகிறது. இதனை நீங்கள்தான் தடுக்க வேண்டும் என ஆங்கிலத்தில் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோல் தமிழில் அவர் முதல்வர் முக ஸ்டாலினுக்கு விடுத்த கோரிக்கையில், நான் புத்திசாலி திறமைசாலியாக இருப்பதால் என்னுடைய வளர்ச்சியை தடுக்கின்றனர். இந்த விஷயத்துக்கு எல்லாம் நான் கோர்ட்டு கேஸ் என்று அலைந்து என்னுடைய நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. நான் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என்று கனவு காண்கிறேன். அரசியல்வாதியாக சமூக சேவகியாக இருக்க வேண்டும் என்பது எனது கனவு.
நான் உலக அளவிலும் இந்திய அளவிலும் பேசப்படும் நடிகையாக இருப்பதால் எனக்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது. ஒரு தமிழ் பெண் உலக அளவிலும் தேசிய அளவிலும் வெற்றி பெற்றவராக இருந்தால் கூட தமிழகத்தில் வாழ கஷ்டப்பட வேண்டியுள்ளது. என்னை கைது செய்ய வேண்டும் என பிரச்சாரம் செய்கின்றனர். தமிழகத்தில் ஒரு வெற்றி பெற்ற பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதை இதுதானா? ஒரு பெண்ணுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்வது தமிழகத்தில் சர்வ சாதாரணமானது. தமிழகத்தில் சோசியல் மீடியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் ஆண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். மீராமிதுன் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
https://www.youtube.com/watch?v=2Tr2-1jETPc