வணிகம்
வரலாற்றில் முதல் முறையாக.. ஒரு கார் கூட விற்காத மாருதி சுசூகி!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. எனவே மாருதி சுசூகி நிறுவனம் வரலாற்றில் முதல் முறையாக ஏப்ரல் மாதம் ஒரு காரை கூட விற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஊரடங்கின் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் இல்லாத உற்பத்திகள் அனைத்து நிறுத்தப்பட்டது. மறுபக்கம் கார் ஷோரூம் உள்ளிட்டவையும் திறக்க அனுமதியில்லை.
உற்பத்தி செய்திருந்த வாகனங்களையும் விற்க முடியாமலும், கூடுதலாக உற்பத்தி செய்ய முடியாமல் கார் உற்பத்தி நிறுவனங்கள் தவித்து வருகின்றன.
எனவே மாருதியின் ஒரு கார் கூடு ஏப்ரல் மாதம் விற்பனையாகவில்லை. இருப்பினும் மாருதி நிறுவனம் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து 632 வாகனங்களை மாருதி சுசூகி ஏற்றுமதி மட்டும் செய்துள்ளது.










