சினிமா செய்திகள்
ஆசை ஆசையாய் வாங்கினது இப்படி போச்சே: குக் வித் கோமாலி மணிமேகலை

ஆசையாக வாங்கிய பைக் காணாமல் போய்விட்டதாக மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
குக் வித் கோமாளி உள்பட விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர் மணிமேகலை என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் முகமது உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்த நிலையில் தனது கணவருக்கு ஆசையாசையாய் முதன்முதலாக ஒரு கேடிஎம் பைக் வாங்கி தந்தார்.
இந்த பைக்கில் இருவரும் பல முறை ஊரை சுற்றி உள்ளனர் என்பதும் இது குறித்த புகைப்படங்களை மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் என்பதும் தெரிந்ததே .

இந்த நிலையில் இந்த பைக் இன்று அதிகாலை காணாமல் போய்விட்டதாக மணிமேகலை சென்னை அசோக் நகர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர் .
ஆசை ஆசையாக முதல் முறையாக வாங்கிய பை காணாமல் போய்விட்டதாகவும் எங்கிருந்து தான் எங்களுக்கு என்று இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்றும் தெரியவில்லை என்று மணிமேகலை தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார். இந்த பைக் தங்களுக்கு திரும்ப கிடைத்துவிடும் என்று தாங்கள் நம்பிக்கையோடு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


















