ஆரோக்கியம்
இதைச் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய்கள் நீங்கும்!

இது மணித்தக்காளி, கறுப்பு மணத்தக்காளி, மிளகு தக்காளி மற்றும் மணத்தக்காளி என்று பெயர்களைக் கொண்டும் குறிப்பிடப்படுகிறது.
உடல் ஆரோக்கியத்துக்கு மணத்தக்காளி மிகவும் முக்கியம். வாரம் 3 முறை மணத்தக்காளி கீரை சாப்பிட வேண்டும். மணத்தக்காளி ஒரு அற்புத மருத்துவம் கொண்ட கீரை. 100 கிராம் கீரையில் 82% நீர்ச்சத்து உள்ளது.
இந்த கீரை புற்றுநோய் வராமல் தடுப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இதைத் தினசரி பயன்படுத்த மணத்தக்காளி கீரை, கூட்டு, சூப் என்று தயாரித்து உண்ணலாம்.
குறிப்பாகச் சூப்பை மிதமான சூட்டில் அருந்தினால் தொண்டைக்கு இடமளிக்கும். மணத்தக்காளி விதைகளை வாங்கி சிறிய இடத்தில் நட்டாலே நன்றாக வளரும்.
இதன் இலையிலிருந்து சாறு பிழிந்து அதில் சிறிதளவு இந்துப்பு போட்டு வாரம் இருமுறை குடித்து வர சிறுநீர்த்தடை, கீழ் வாயு போன்றவை உடனே கட்டுப்படும்.
அதோடு, இலையைக் காய வைத்து வெந்நீரில் ஊற வைத்தும் சாப்பிடலாம். இப்படிச் சாப்பிடுவதால் இதயம், நுரையீரல், கணையம், வயிறு மற்றும் குடல் தொடர்பான நோய்கள், கல்லீரல், மண்ணீரலில் உள்ள வீக்கம் குறையும், மார்வு வலியையும் சளியையும் கட்டுப்படுத்த முடியும்.
மணத்தக்காளியினது காய்,கனி,இலை,வேர் இவற்றை ஊறுகாய், வற்றல் குடிநீர் செய்து உட்கொள்ள நீண்ட வாழ்நாள் மற்றும் நோயற்ற உடலுடனும் வாழலாம்.















