உலகம்
10 மாதங்களுக்கு முன் தொலைந்த ஐபோன், ஆற்றில் கிடைத்த அதிசயம்!

பத்து மாதங்களுக்கு முன் தொலைந்துபோன ஐபோன், ஆற்றில் கிடைத்த அதிசய நிகழ்வு ஒன்று சமீபத்தில் நடந்துள்ளது. அந்த ஐபோன் கிடைத்தது மட்டுமின்றி அந்த ஐபோன் வழக்கம்போல் வேலை செய்ததால் அதன் உரிமையாளர் மிகப்பெரிய அளவில் ஆச்சர்யம் அடைந்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஓவைன் டேவிஸ் என்பவர் தனது ஐ போனை கடந்த ஆகஸ்ட் மாதம் விருந்து ஒன்றில் கலந்து கொண்டிருந்த போது திடீரென நதியின் தொலைத்தார். எவ்வளவோ தேடிப் பார்த்தும் அந்த ஐபோனை அவரால் திரும்ப கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை அடுத்து அவர் சோகத்துடன் வீடு திரும்பினார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட பத்து மாதங்களுக்குப் பின்னர் அதே ஆற்றில் தனது குடும்பத்துடன் பயணம் செய்து கொண்டிருக்கும் போது அந்த ஐபோனை கண்டுபிடித்தார். ஆற்றிலிருந்து ஐபோனை எடுத்து அவர் ரீ ஸ்டார்ட் செய்த போது எந்தவித பிரச்சினையும் இல்லாமல் உடனடியாக ரீஸ்டார்ட் ஆனது.
இருப்பினும் அவர் அந்த சாதனத்தை உலர வைத்து அதன்பின் அவர் இயக்கிய போது அவரால் நம்ப முடியாத அளவுக்கு முழுமையாக சார்ஜ் இருந்தது என்பதும் அவரது டேட்டா முழுமையும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் இருந்தது என்பதும் வால்பேப்பர் உட்பட அனைத்து விஷயங்களையும் பார்த்து அவர் ஆச்சரியம் அடைந்தார்.
தொலைந்துபோன ஐபோன் கிடைத்தது குறித்து அவர் தனது முகநூலில் புகைப்படத்துடன் வெளியிட்டு நிலையில் அந்த பதிவுக்கு மிகப்பெரிய அளவிலும் கமெண்ட்ஸ் லைக்ஸ்கள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபோன்களில் தொழில் நுட்பத்தின்படி ஒன்றரை மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே ஒரு ஐபோனால் பிரச்சானி இல்லாமல் இருக்க முடியும். ஆனால் பத்து மாதங்கள் இந்த ஐபோன் தாக்குப்பிடித்து வழக்கம்போல் வேலை செய்வது மிகப் பெரிய ஆச்சரியத்தை அளித்துள்ளது.