சினிமா செய்திகள்
சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி கேட்டு மனு வழங்கிய நடிகை குஷ்பு!

கொரோனா பாதிப்பை குறைப்பதற்காக நடைபெற்றும் வரும் ஊடரங்கினால், தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் தொலைக்காட்சி சேனல்களில் பழைய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இன்று தமிழக சட்ட மன்றத்திற்கு வந்த நடிகை குஷ்பு மற்றும் பிற சீரியல் நடிகர்கள், அமைச்சர் கடம்பூர் ராஜூவை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
அதில், தொலைக்காட்சி சீரியல்கலுக்கு குறைவான ஆட்கள் பயன்படுத்தி மட்டுமே படப்பிடிப்பு நடைபெறும் என்பதால், அதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை குஷ்பு, “தொலைக்காட்சி சீரியல்களின் படப்பிடிப்பு தளத்தில் குறைந்த நாட்களுடன் மட்டுமே ஷூட்டிங் நடைபெறும். அது மட்டுமல்லாமல், அங்கு தனிமனித இடைவேளி பொன்றவையும் முறையாகக் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுப்போம். விரைவில் சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்குங்கள் என்று அமைச்சரிடம் கேட்டுக்கொண்டதாக” தெரிவித்தார்.















