கிரிக்கெட்
கிங் கோஹ்லி.. ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்த கேப்டன்!

டெல்லி: இந்திய கேப்டன் கோஹ்லி, ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்து இந்தியா மோதும் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தாலும், கேப்டன் கோஹ்லி மிகவும் சிறப்பாக ஆடினார்.
இதில் அவர் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் எடுத்தார். இதன் மூலம் அவருக்கு ஐசிசி தரவரிசையில் முன்னேற்றம் கிடைத்துள்ளது. தற்போது அவர் ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடித்த கோஹ்லி!
தன்னுடைய 67 டெஸ்ட் போட்டி வரலாற்றில் அவர் முதல் முறை இந்த சாதனையை படைக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 32 மாதங்களாக வைத்து இருந்த இடத்தை அவர் பெற்றுள்ளார்.
அதேபோல் கோஹ்லி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் பிடிக்கும் 7வது இந்திய வீரர் ஆவார். கவாஸ்கர், திலீப் வெங்காசாரக்கார், சச்சின், ராகுல், சேவாக் , கம்பீர் ஆகியோர் முதல் இடம் பிடித்து இருக்கிறார்கள்.



















