தமிழ்நாடு
கொடைக்கானல் டோல் கட்டணம் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கான டோல் கட்டணத்தை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மாவட்ட நிர்வாகம் உயர்த்தி அறிவித்துள்ளது.
சுற்றுலா பேருந்துகள்
கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பேருந்துகளுக்கு 250 ரூபாய் டோல் கட்டணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
லாரிகள்
லாரிகளுக்கான டோல் கட்டணம் 150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. கனரக வாகனங்களுக்கான டோல் கட்டணம் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மினி லாரி & டிராக்டர்
மினி லார் மற்றும் டிராக்டர்களுக்கான டோல் கட்டணம் 80 ரூபாயாக உள்ளது. இதுவே வாடகை மினி பேருந்துகள், கார்களுக்கு 60 ரூபாயாக டோல் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2, 3 சர்க்கர வாகனங்கள்
அதே நேரம் 2, 3 சர்க்கர வாகனங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலக்கு
கொடைக்கானல் வட்டத்திற்கு உட்பட்ட வாகனங்களுக்கு இந்த டோல் கட்டணத்திலிருந்து விலக்கும் உண்டும். அதற்கு வாகன உரிமையாளர்கள் கொடைக்கானல் நகராட்சியிடம் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எப்போது முதல்?
கொடைக்கானலில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய டோல் கட்டணம் உயர்வு உடனடியாக அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இனி கொடைக்கானல் சுற்றுலா செல்லும் பயணிகளுக்குக் கூடுதல் செலவாகும்.