தமிழ்நாடு
டிடிவி தினகரன் ஆதரவாளர்களுடன் கருணாஸுடன் திடீர் சந்திப்பு!

சென்னை: எம்எல்ஏ பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 6 பேர் கருணாஸுடன் திடீர் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள்.
முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில் முதல்வரையே நான் அடிப்பேன் என்றும் போலீசுக்கு எதிராகவும் பேசினார் .

இதற்காக கைது செய்யப்பட்ட அவர் நிபந்தனை ஜாமீனில் வேலூர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.இந்த நிலையில் இன்று அவர் அமமுக தலைவர் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களை சென்று சந்தித்தார்.
எம்எல்ஏக்கள் தங்க தமிழ்ச்செல்வன், கதிர்காமு உள்ளிட்டோர் கருணாஸுடன் சந்திப்பு நடத்தினார். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




















