தமிழ்நாடு
ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல்.. ஈபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி..!

திமுகத் தலைவர் கருணாநிதி உடல் சென்னை ராஜாஜி அரங்கில் பொது மக்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இருவரும் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் போது பிற அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தி சென்றனர்.
அப்போது அங்குக் கூடியிருந்த திமுகத் தொண்டர்கள் மெரினாவில் இடம் அளிக்க வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர்.
பின்னர்ச் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பத்திரிக்கையாளர்களுக்குப் பெட்டி அளித்தார். அதில் கலைஞர் இறப்புத் தமிழகத்திற்குப் பேரிழப்பு என்று குறிப்பிட்டார்.
மெரினாவில் இடம் அளிக்கப்படுமா என்றகேள்விக்கு பதில் அளிக்க மறுப்பு.



















