தமிழ்நாடு
சினிமா போல கோவை தொகுதியை மாற்றுவேன்- கமல் ஆவேச உரை!!

தமிழ் சினிமாவில் மாற்றங்களைக் கொண்டு வந்தது போல கோவையில் நான் போட்டியிடும் தொகுதியிலும் மாற்றத்தைக் கொண்டு வருவேன் என்று கூறியுள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்.
கமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். நேற்று கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் கமல். இதைத் தொடர்ந்து அவர் அந்த தொகுதியில் ஒருங்கிணைக்கப்பட்ட பொதுக் கூட்டத்தில் பேசிய போது,

‘தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்று நான் நினைத்தேன். அதற்கான செயல்பாடுகளிலும் ஈடுபட்டேன். அதனுடைய சான்று இன்று உங்கள் முன்னால் இருக்கிறது. அதைப் போல கோவை தெற்குத் தொகுதியிலும் மாற்றத்தைக் கொண்டு வரப் பார்க்கிறேன். சினிமாவில் கொண்டு வந்தது போல ஒரு மாற்றத்தை இங்கு கொண்டு வருவேன்.

அதற்கு நீங்கள் என்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனக்கு 66 வயதாகிவிட்டது. எனவே இப்போதே நீங்கள் என்னைத் தேர்வு செய்தால் மட்டும் தான் உங்களுக்கு என்னால் சேவை செய்ய முடியும்’ என தொண்டர்களின் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் பேசினார்.






















