சினிமா செய்திகள்
’தலைவர் 170’ படத்தின் தயாரிப்பாளர் இவரா? ஆச்சரியத்தில் கோலிவுட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்காத நிலையில் அவருடைய 170வது படத்தை தயாரிக்கும் நிறுவனம் குறித்த தகவல் கசிந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது என்பதும் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் டிராப் என வதந்திகள் வந்தாலும் இந்த படம் உருவாகுவது உறுதி என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தலைவர் 170 திரைப்படத்தை போனிகபூர் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது .
ஆனால் அதே நேரத்தில் இந்த படம் இந்த ஆண்டு இறுதியில்தான் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. அதற்கான ஆரம்பகட்ட பணியை அருண்ராஜா காமராஜ் தொடங்கி இருப்பதாகவும் இந்த ஆண்டு டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.