சினிமா செய்திகள்
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ பாடல், இது படத்துக்கு எழுதினதா, நயனுக்கு எழுதியதா விக்னேஷ் சிவன்?

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள் என்பதும் ஏற்கனவே திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் இந்த ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் சமந்தாவும் மற்றொரு நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இன்று வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இணையதளங்களில் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் ரவி மற்றும் சாஷா திரிபாதி குரலில் உருவான ’நான் பிள்ளை’ என்று தொடங்கும் இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பதும் இந்த பாடலின் வரிகளைக் கேட்கும் போது இந்த பாடல் படத்திற்காக எழுதினதா? அல்லது தான் காதலிக்கும் நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் எழுதினாரா? என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்றும் விக்னேஷ் சிவனை நோக்கி கேள்விகள் எழுந்து வருகிறது. அந்த அளவுக்கு நயன்தாராவை நினைத்து உருகி உருகி விக்னேஷ் சிவன் இந்த பாடலை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பிடத்தக்கது.