வணிகம்
ஜியோ, ஏர்டெல், விஐ நிறுவனங்களுக்குக் குட்டு வைத்த டிராய்!

அழைப்பு, எஸ்எம்எஸ் பேக்குக்குகளுடன் டேட்டா கட்டணத்தையும் சேர்த்து வசூலிக்கும் நிறுவனங்களுக்கு டிராய் குட்டு வைத்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்கள் சமீப காலமாக அழைப்பு, எஸ்எம்எஸ் சேவை மட்டும் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை நீக்கியுள்ளன.
இதனால் வாடிக்கையாளர்களுக்குத் தேவையில்லா கூடுதல் செலவாகி வந்தன. டெலிகாம் நிறுவனங்களுக்கு வருவாய் அதிகரித்து வந்தது. அதற்கு டிராய் குட்டு வைத்துள்ளது.
டெலிகாம் வாடிக்கையாளர் விதிமுறைகள் 2024 கீழ் புதிய திருத்தங்களை டிராய் வெளியிட்டுள்ளது.
எனவே விரைவில் டெலிகாம் நிறுவனங்கள் டேட்டா இல்லாத ரீசார்ஜ் பேக்குகளை வெளியிடுவார்கள்.
இதனால் 2 சிம் கார்டுகள் வைத்துள்ள நபர்கள் மற்றும், ஸ்மார்ட்போன் இல்லாதவர்கள் பயனடைவார்கள்.
















