சினிமா
அடக்கமுறைக்கு எதிராக சூர்யா.. அதிர வைக்கும் ஜெய்பீம் டிரெய்லர் வீடியோ…
Published
1 year agoon
By
ராஜேஷ்
சூர்யா நடிப்பில் து.பா.சரவணன் என்பவர் இயக்கத்தில் உருவாக்கிய திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்த படம் வரும் தீபாவளி விருந்தாக நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
சூர்யா இந்த படத்தில் வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யும் அவர் அந்த மக்களுக்காக வாதாடி அவர்களுக்கு தேவையான உரிமைகளை பெற்றுத் தருவது தான் இந்த படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் சூர்யா, ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பதும், இந்த திரைப்படத்திற்கு எஸ்ஆர் கதிர் ஒளிப்பதிவும் ஃபிலோமினா ராஜ் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பபடத்தின் தீம் மியூசிக் மற்றும் அதன் பின்னணி காட்சிகள் குறித்த வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது. அதோபோல், இப்படத்தின் டீசர் வீடியோவும் வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
You may like
-
ஐரோப்பாவிற்கு இடமாற்றம்.. வீடு, காரை விற்ற அமேசான் ஊழியருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
-
15 நாட்களில் 24,000 பேர் வேலைநீக்கம்.. 2023 தொடக்கமே இப்படியா?
-
2வது கணவரையும் விவாகரத்து செயத அமேசான் ஜெஃப் பிஜோஸ் முதல் மனைவி: என்ன காரணம்?
-
அமேசான் வீட்டுக்கு அனுப்பும் ஊழியர்களில் இந்தியர்கள் மட்டும் இத்தனை பேர்களா? அதிர்ச்சி தகவல்
-
ஒரே ஒரு அறிவிப்பு.. ரூ.5000 கோடி லாஸ்: அமேசான் ஜெஃப் பிஜோஸ் அதிர்ச்சி
-
17000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்.. அதிர்ச்சியில் அமேசான் ஊழியர்கள்