பிற விளையாட்டுகள்
டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு தங்கம் கிடைக்குமா?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் ஒருசிலர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்பதும் அவர்களில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கமும், பிவி சிந்து வெண்கல பதக்கமும் இந்தியாவுக்கு பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மேலும் சில பதக்கங்கள் இந்தியாவுக்குக் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
இன்று காலை நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா, முதல் வாய்ப்பில்லையே 86.65 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை செய்தார். இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றவர்களில் நீரஜ் சோப்ரா தான் முதலிடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டியிலும் சிறப்பாக ஈட்டி எறிந்து இந்தியாவுக்காக பதக்கம் பெற்றுத் தருவார் என்றும், அனேகமாக தங்கபதக்கம் பெற்று தர கூட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த 23 வயது நீரஜ் சோப்ரா ஏற்கனவே பின்லாந்தில் நடைபெற்ற விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்காக வெண்கல பதக்கம் பெற்றுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








