இந்தியா
இந்தியர்களின் வாக்குகள் திருடப்படுகிறது. தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டு.

புதுதில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் ராகுல்காந்தி இன்று பிற்பகலில் செய்தியாளர் சந்திப்பு மேற்கொண்டார்.
இந்தியர்களின் வாக்குகள் திருடப்படுவதாக தேர்தல் ஆணையம் மீது ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.
கருத்துக் கணிப்புகளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பெருமளவில் வித்தியாசம் தென்படுகிறது.
மகாராஷ்டிராவில் 5 மாதங்களில் 1 கோடி புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டது எப்படி சாத்தியமானது?
வாக்காளர் பட்டியல் என்பது இந்த நாட்டின் சொத்து ஆனால் தேர்தல் ஆணையம் அதை வழங்க மறுக்கிறது.
மிண்ணணு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வழங்க மறுப்பது ஏன்?
பாஜக தேர்தல்களை மோசடியாக நடத்துகிறது. அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகிறது. அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன
மிண்ணணு வாக்காளர் பட்டியலை வழங்கினால் 30 நிமிடத்தில் நடந்த மோசடியாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களை கண்டறிய முடியும்..
பாஜகவுக்கு சாதகமாக ஒவ்வொரு தொகுதியிலும் பல புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பல தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே முரண்பாடு உள்ளது.
ஒரு வாக்ஙாளரின் பெயர் ஒரே பட்டியலில் நான்கு முறை காட்டப்பட்டு நான்கு ஓட்டுகள் போடப்பட்டுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட பலர் முதல் முறையாக வாக்காளர்களாக சேர்க்கப் பட்டுள்ளனர்.
ஒரே தொகுதியில் 36000 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப் பட்டுள்ளனர்.
மகாதேவபுரா தொகுதியில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான போலியான முகவரிகள் உள்ளன. 1,14,046 போலியான வாக்குகள் பதிவாகியுள்ளன.
இது இந்திய அரசியல் சாசத்திற்கு எதிரான குற்றம்.
தனியார் ஆலை முகவரியில் 66 வாக்காளர்கள் இருப்பதாக பட்டியலில் தகவல் உள்ளது
மூதாட்டி முதன்முறை வாக்காளர் ஆக சேர்க்கப் பட்டிருப்பது தவறின் முதல் புள்ளி..
மகாராஷ்டிரா சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முறைகேடாக வாக்களித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் மக்கள் பார்வையிலிருந்து எதனை மறைக்க விரும்புகிறது?
பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து 65 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீக்கப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலாகிறது
ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான வாக்குகள், புகைப்பட மாற்றம், முகவரி மாற்றம் ஃபார்ம் 16 முறைகேடாக செய்யப்பட்டுள்ளன.
கதவு எண்0, தெரு பெயர் 0, ஆனால், கணவர் பெயருடன் வாக்காளர் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒரே நபர் கர்நாடகாவிலும், உ.பி. மகாராஷ்டிராவிலும் வாக்களித்துள்ளார்..
செய்தியாளர்கள் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் பதிலளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
போலி வாக்காளர்கள் குறித்த புள்ளிவிவர புத்தகங்களுடன் தேர்தல் ஆணையத்தை நோக்கி கேள்விகள் எழுப்பி உள்ளார்…









