செய்திகள்
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்ப நிலை – முக்கிய அப்டேட் வந்துவிட்டது!
Published
1 வருடம் agoon
By
Poovizhi
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பித்துப் பரிசீலனையின் கீழ் காத்திருக்கும் மகளிருக்கு ஒரு முக்கிய செய்தி வெளியாகியுள்ளது.
ஜூலை 15 முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் தினமும் தகுதியான பெண்கள் இந்தத் திட்டத்துக்காக விண்ணப்பித்து வருகின்றனர். தற்போது வரை 5 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அரசு ஏற்கனவே வந்துள்ள விண்ணப்பங்களை பகுதி பகுதியாக பரிசீலிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த செயலியில் ஈடுபட்டுள்ளனர்.
விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானவைதானா? என்பதை அதிகாரிகள் விசாரித்து முடிவு செய்யவுள்ளனர். அதன் பிறகே அங்கீகாரம் மற்றும் உரிமைத் தொகை வழங்கப்படும்.
உங்கள் விண்ணப்ப நிலையை ஆன்லைனில் அறிய எப்படி?
முதலில் 👉 https://kmut.tn.gov.in/ என்ற இணையதளத்தைத் திறக்கவும்.
முகப்பு பக்கத்தில் “விண்ணப்ப நிலையை அறிய” என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
அங்கு “பொதுமக்கள் உள்நுழைவு” என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் ஆதார் எண் உள்ளிடவும்.
OTP உங்கள் பதிவான மொபைலுக்கு வரும் – அதனை உள்ளிடவும்.
உடனே உங்கள் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை காட்டப்படும்.
இதனால் உங்கள் விண்ணப்பம் தற்போது எந்த நிலைமையில் உள்ளது என்பது குறித்த தகவலை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும்.
J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.









