இந்தியா
வரி பிரச்சனை தீரும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை இல்லை – டிரம்ப் கடுமையான பதில்!

வரி பிரச்சனை தீரும் வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை இருக்காது – டிரம்ப் கண்டனம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான வாய்ப்பு தற்போது இல்லையெனத் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் ஒரு செய்தியாளர், “இந்தியா மீது 50% வரி விதிக்கப்பட்ட பிறகு, வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெறும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?” எனக் கேட்டார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப்,
“இல்லை. வரி விதிப்பு பிரச்னை தீரும் வரை எந்த பேச்சுவார்த்தையும் இருக்காது”
எனக் கூறியுள்ளார்.


