கிரிக்கெட்
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து முன்னிலை: கடைசி வரை ஆட்டமிழக்காத ஜோரூட்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 391 ரன்கள் எடுத்து இந்தியாவை விட முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா இங்கிலாந்து 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்த முதல் இன்னிங்சில் 364 ரன்கள் எடுத்தது. இந்தியாவின் கேஎல் ராகுல் 129 ரன்கள் எடுத்தார்.
இதனை அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி முதலில் 2 விக்கெட்டுகளை இழந்தாலும் அதன்பின் கேப்டன் ஜோரூட் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை 391 என்ற நிலைக்கு எடுத்துச் சென்றார். அவர் மட்டுமே 180 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார் என்பதும் அதில் 18 பவுண்டரிகள் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி 27 ரன்கள் முன்னிலையில் இருக்கும் நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே ஆட்டம் இருக்கும் நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் முடிந்து இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு தெரியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஸ்கோர் விபரம்:
இந்தியா முதல் இன்னிங்ஸ்: 364/10
கே.எல்.ராகுல்: 129
ரோஹித் சர்மா: 83
விராத் கோஹ்லி:42
ஜடேஜா:40
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 391/10
ஜோ ரூட்: 180
ஜென்னி பெயர்ஸ்டோ: 57
பர்ன்ஸ்: 49