Connect with us

இந்தியா

உலக வங்கியின் தலைவர் ஆகிறார் இந்தியர்.. அமெரிக்காவை ஆளப்போகும் இந்தியர்கள்..!

Published

on

ஏற்கனவே இந்தியர்கள் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் சிஇஓ பதவிகளில் இருக்கும் நிலையில் தற்போது உலக வங்கியின் தலைவர் பதவியையும் இந்தியர் ஒருவருக்கு பெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

உலக வங்கியின் தற்போதைய தலைவர் டேவிட் மல்பாஸ்என்பவர் வரும் ஜூன் மாத இறுதியில் பதவி விலகுவதாக அறிவித்ததில் இருந்து அடுத்த உலக வங்கியின் தலைவர்கள் யாராக இருக்கும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது உலக வங்கியின் தலைவராக புதிய தலைவராக அஜய் பங்கா என்ற இந்தியரை பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இவர் ஏற்கனவே மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றின் இந்த முக்கியமான தருணத்தில் உலக வங்கியை வழிநடத்த அஜய் தனித்துவம் வாய்ந்தவர் என்று அவரை பரிந்துரை செய்த அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டூகளுக்கும் மேலாக வெற்றிகரமான, உலகளாவிய நிறுவனங்களை உருவாக்கி நிர்வகித்துள்ள அஜய் பங்கா, உலக வங்கி தலைவர் பதவிக்கு சரியான நபராக இருப்பார் என கூறப்படுகிறது.

தற்போதைய உலக வங்கியின் தலைவரான டேவிட் மல்பாஸ், ஜூன் மாத இறுதிக்குள் பதவி விலகுவதாக அறிவித்தார். மால்பாஸின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிய இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில் அவர் முன்கூட்டியே பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.

63 வயதான அஜய் பங்கா, இந்திய-அமெரிக்கர் மற்றும் தற்போது ஜெனரல் அட்லாண்டிக் என்ற ஈக்விட்டி நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றுகிறார். இவர் முன்பு மாஸ்டர்கார்டில் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றம் உட்பட நமது காலத்தின் மிக அவசரமான சவால்களைச் சமாளிக்க பொது-தனியார் வளங்களைத் திரட்டுவதில் அஜய்க்கு அனுபவம் உள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் போன்ற உலகளாவிய பிரச்சனைகளை மிகவும் திறம்பட மறுசீரமைக்கவும் மற்றும் தீர்க்கவும் அஜய்யால் முடியும் என்றும் கூறப்படுகிறது.

தற்போது தனியார் பங்கு நிறுவனமான ஜெனரல் அட்லாண்டிக் நிறுவனத்தின் துணைத் தலைவராக இருக்கும் அஜய் பங்கா, 30 ஆண்டுகளுக்கும் மேலான வணிக அனுபவம் கொண்டவர், மாஸ்டர்கார்டு மற்றும் அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம், கிராஃப்ட் ஃபுட்ஸ் மற்றும் டவ் இன்க் வாரியங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். உலக வங்கியின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருவூலச் செயலர் ஜேனட் யெல்லென் ஒரு அறிக்கையில், ’ அஜய் பங்காவின் அனுபவம், உலக வங்கியின் தீவிர வறுமையை நீக்குதல் மற்றும் நிறுவனத்தை திறம்பட மேம்படுத்துவதற்கு தேவையான மாற்றங்களை தொடரும் என்று தெரிவித்தார்.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?