பர்சனல் பைனான்ஸ்
’வருமான வரி’ இன்னும் தாக்கல் செய்யவில்லையா? கவலை வேண்டாம்? விவரம் உள்ளே!
Published
2 years agoon
By
seithichurul
மத்திய அரசு 2018-2019-ம் நிதியாண்டுக்கான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31-ம் தேதியிலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது. இது 2018-2019 நிதியாண்டுக்கான வரியை தாக்கல் செய்ய வேண்டியவர்களுக்கான மூன்றாவது முறை நீட்டிக்கப்படும் காலக்கெடுவாகும். பொதுவாக ஒரு நிதியாண்டுக்கான வருமான வரியை அடுத்த நிதியாண்டு முடியும் முன்பு செலுத்த வேண்டும்.
மேலும் வருமான வரி செலுத்துவது குறித்து வெளியாகியுள்ள 4 முக்கிய அறிவிப்புகளை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல்
2018-2019 நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
படிவம் 16
2019-2020 நிதியாண்டுக்கான படிவம் 16-ஐ ஊழியர்களுக்கு வழங்குவதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேலை முன்கூட்டியே வருமான வரி செலுத்த விரும்புபவர்கள் படிவம் 26AS-ஐ பதிவிறக்கம் செய்து வருமான வரியை தாக்கல் செய்யலாம்.
2019-2020 நிதியாண்டுக்கான வருமான வரி
2019-2020 நிதியாண்டுக்கான வருமான வருமான வரியை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் – பான் இணைப்பு
ஆதார் – பாண் கார்டு எண் இணைப்பதற்கான காலக்கெடு 2021-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
You may like
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31 வரை நீட்டிப்பு!
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
ஜூன் 30-ம் தேதிக்குள் நீங்கள் கண்டிப்பாக இதையெல்லாம் செய்ய வேண்டும்.. ஏன் தெரியுமா?
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!
நிறுவனங்களுக்கான வருமான வரி தாக்கல் காலக்கெடு நீட்டிப்பு!