Connect with us

வணிகம்

வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

Published

on

2020-2021 நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதாக நேரடி வருமான வரி வாரியம் அறிவித்துள்ளது.

பொதுவாக வருமான வரியை ஒவ்வொரு ஆண்டும், ஜூலை மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் சில காரணங்களுக்காக வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்படும்.

சென்ற ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான இணையதளத்தில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணத்தால், 2020-2021 நிதியாண்டு அல்லது 2021 – 2022 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இதுவே ஜூலை மாதத்திலிருந்து செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பரிவர்த்தனை அல்லது சட்டத்தின் 92ஈ பிரிவின் கீழ் குறிப்பிட்ட உள்நாட்டுப் பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட நபர்கள் 2020-21-ம் வருடத்திற்காகச் சமர்ப்பிக்க வேண்டிய கணக்காளரிடம் இருந்து பெற்ற அறிக்கைக்கான கடைசி தேதி 2021 அக்டோபர் 31-ல் இருந்து 2021 நவம்பர் 30 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 31 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2020-21-ம் வருடத்திற்கான தணிக்கை அறிக்கையைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 30-ல் இருந்து 2021 அக்டோபர் 31 ஆக நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், அது தற்போது 2022 ஜனவரி 15 வரை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Meci việt nam chuyên cung cấp giải pháp sản phẩm phụ trợ nhà xưởng, chuyên sản xuất và lắp đặt rèm nhựa pvc, cửa cuốn nhanh pvc, quạt cắt gió, Đèn, vách,.