தமிழ்நாடு
முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு பதிவு: நள்ளிரவில் பாஜக நிர்வாகியை தூக்கிய போலீஸ்!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவு செய்துள்ள பாஜக நிர்வாகி நள்ளிரவில் காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் குறித்து கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனையடுத்து முதல்வரை அவதூறாக பேசியதாக திமுக நிர்வாகிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சற்றுமுன் கைது செய்துள்ளனர்.
முன்னதாக நேற்று நள்ளிரவு 2:30 மணி அளவில் ஜெயபிரகாஷ் வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது ஒரு தகவல் அறிந்ததும் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் போலீசாரை முற்றுகையிட்டதால் கைது முயற்சி தோல்வியடைந்தது .
அதன்பின் நான்குமணி நேரமாக போலீசார் பாஜக நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து ஜெயப்பிரகாஷை காவல் நிலையத்துக்கு அழைத்து வருகிறோம் என பாஜகவினர் உறுதி அளித்தனர். இதனையடுத்து போலீசார் திரும்பி சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் ஜெயப்பிரகாஷ் கைது செய்யப்பட்டார் என காவல்துறை வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

















