Connect with us

தமிழ்நாடு

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்: அண்ணாமலை சவால்!

Published

on

வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக அவரது அறிக்கையை அடிப்படையாக வைத்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார். இந்நிலையில் திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை.

#image_title

வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலியான செய்திகளை பரப்பிய விவகாரத்தில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி மீதும். பீகாரில் பாஜக டிவிட்டர் பக்கத்தை கையாளும் பிரிவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அவர் மீதும் வழக்குகள் பாய்ந்தது.

அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் தொடங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் காரணம்.

திமுக ஆரம்பிக்கப்பட்டதி இருந்து தற்போது வரை ஏதோ ஒரு பிரிவின் மீது வெறுப்பை விதைத்து வந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பேச்சுக்கள் ஏளனப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டது. இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியது, கலவரத்தை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்தது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! என சவால் விடுத்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.04.2026

செய்திகள்10 மணி நேரங்கள் ago

தமிழக சட்டசபை தேர்தல் 2026: நேரடி அப்டேட்கள், பிரச்சாரம் தீவிரம், டாஸ்மாக் மூடல் அறிவிப்பு!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சித்திரை மாத ராசி பலன் 2026: சூரியன் மேஷ ராசி பெயர்ச்சி – 12 ராசிகளுக்கு என்ன பலன்?

ஆன்மீகம்11 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: மேஷ ராசியில் சனி – யாருக்கு ஏழரை சனி, யாருக்கு அதிர்ஷ்டம்?

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

சனி பெயர்ச்சி 2027: 30 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் சனி – எந்த ராசிகளுக்கு ராஜயோகம்?

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: மனதை வருடும் இனிய வாழ்த்துக்கள் & கவிதை மெசேஜ்கள்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

மங்களாதித்ய யோகம் 2026: மே மாதத்தில் 3 ராசிகளுக்கு செல்வ வெள்ளம் – வாழ்க்கை மாறும்!

ஆன்மீகம்20 மணி நேரங்கள் ago

தமிழ் புத்தாண்டு 2026: பராபவ ஆண்டில் இந்த 5 ராசிகளுக்கு பணமழை – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

ஆரோக்கியம்20 மணி நேரங்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: அசிஸ்டன்ட் மேனேஜர் பணிக்கு அறிவிப்பு – ரூ.16 லட்சம் சம்பளம்!

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

RITES வேலைவாய்ப்பு 2026: டிப்ளமோ படித்தவர்களுக்கு இன்ஜினியர் வேலை – 5 காலியிடங்கள்!

சினிமா7 நாட்கள் ago

திரிஷா வெளியிட்ட பரபரப்பு பதிவு: ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய புதிய அப்டேட்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 சிறப்பு அதிகாரி பணியிடங்கள் – ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னை ஐஐடி வேலைவாய்ப்பு 2026: ரூ.18,000 சம்பளத்தில் Junior Executive பணிகள் – உடனே விண்ணப்பிக்க!

கிரிக்கெட்7 நாட்கள் ago

ஐபிஎல் 2026: மும்பையை வீழ்த்தி ராஜஸ்தான் ஹாட் ஸ்ட்ரீக் – 3 போட்டிகளில் 3 வெற்றி, புள்ளிப்பட்டியலில் முதல் இடம்!

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாளில் நிராகரிக்கப்பட்ட 2449 பேரின் வேட்பு மனுக்கள். தமிழ்நாடு தேர்தல் களம். இறுதி வேட்பாளர் பட்டியல்.

ஆன்மீகம்6 நாட்கள் ago

இந்தியாவில் காலக்கோடு மற்றும் காலத்தின் கணக்கு மாற்றப்பட இருக்கிறதா? அப்படி மாறினால் என்ன விளைவுகள் ஏற்படும்?

இந்தியா5 நாட்கள் ago

இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களின் கைகளில் – ஆனால் அந்த கைகளில் இன்று வேலை வாய்ப்பு இல்லை

ஆரோக்கியம்7 நாட்கள் ago

மொபைல் அடிமையாகும் குழந்தைகள்: பேசும் திறன் குறையும் அபாயம் – ஆய்வு எச்சரிக்கை!

Translate »
??. Martinstools | professional saas tools for everyone. Cəlilabadda 8 mart beynəlxalq qadınlar günü münasibətilə tədbir keçirilib.