தமிழ்நாடு
திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்: அண்ணாமலை சவால்!

வடமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதல் குறித்த வதந்தி விவகாரத்தில் கலவரத்தை தூண்டும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செயல்பட்டதாக அவரது அறிக்கையை அடிப்படையாக வைத்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது மத்திய குற்றப்பிரிவு போலீசார். இந்நிலையில் திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும் என சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை.

#image_title
வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலியான செய்திகளை பரப்பிய விவகாரத்தில் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்திரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி மீதும். பீகாரில் பாஜக டிவிட்டர் பக்கத்தை கையாளும் பிரிவினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அவர் மீதும் வழக்குகள் பாய்ந்தது.
அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், திமுகவின் இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கையில் தொடங்கிய இந்த எதிர்ப்பு பிரச்சாரம் தற்போது ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதும் திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் காரணம்.
திமுக ஆரம்பிக்கப்பட்டதி இருந்து தற்போது வரை ஏதோ ஒரு பிரிவின் மீது வெறுப்பை விதைத்து வந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த இந்த இரண்டு வருடங்களில் திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பேச்சுக்கள் ஏளனப்படுத்துவதாக உள்ளது என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது, புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அவதூறு பரப்பும் வகையில் அறிக்கை வெளியிட்டது. இரு பிரிவினரிடையே மோதலை தூண்டியது, கலவரத்தை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்தது என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்.
இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, வட மாநிலத்தவர் குறித்து திமுக செய்த வெறுப்பு பிரச்சாரங்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தேன். அதற்காக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிகிறேன். அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவையை காணொளியாகவும் வெளியிடுகிறேன். திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும். பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல்வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள். ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள்! என சவால் விடுத்துள்ளார்.