தமிழ்நாடு
உங்களுக்கு காய்ச்சல் இருக்கா? என்ன சிகிச்சை செய்ய வேண்டும்? தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவுரை

சென்னை: தமிழ்நாட்டில் பரவி வரும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை முக்கிய அறிவுரைகளை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுக்க இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. H3N2 இன்ப்ளூயன்சா காய்ச்சல் ஆகும் இது. இதனால் பாதிக்கப்படும் நபர்களுக்கு தொண்டை வலி, காய்ச்சல், சளி, உடல் வலி, மயக்கம், வயிற்று வலி உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.
சிலருக்கு கொரோனா அறிகுறிகள் அடிக்கடி ஏற்பட தொடங்கி உள்ளன. பலர் படுத்த படுக்கையாக நிலை கூட இதனால் ஏற்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிலும் இந்த கேஸ்கள் அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாட்டில் பரவி வரும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை முக்கிய அறிவுரைகளை வெளியிட்டு உள்ளது.
அதில்,
யாரும் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுக்க கூடாது. இது வைரஸ் காய்ச்சல் என்பதால் அது பலன் அளிக்காது. மீறி எடுத்தாலும் கூட உங்களின் எதிர்ப்பு சக்தி குறையவே வாய்ப்பு உள்ளது.
இதனால் மருத்துவமனையில் சேர வேண்டியது இல்லை. மருத்துவர் அறிவுரையுடன் சாதாரண காய்ச்சல் மருந்துகளை எடுக்கலாம்.
இதற்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய வேண்டியது இல்லை.
மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கலாம்
ரெமிஸ்வர் போன்ற மருந்துகளை கண்டிப்பாக பயன்படுத்தவே கூடாது.
அறிகுறிகள் எப்படி இருக்கிறதோ அதை பொறுத்தே சிகிச்சை அளிக்க வேண்டும்.
ஓசல்டாமிவிா் போன்ற மருந்துகள் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டியது இல்லை
குழந்தைகள், முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும்.
இவர்கள் பாதிக்கப்பட்டால் மட்டும் அவர்களுக்கு இந்த மருந்தை மருத்துவர் அறிவுரையுடன் கொடுக்கலாம்
கூட்டமான இடத்திற்கு செல்ல கூடாது.
மீண்டும் மாஸ்க் பயன்படுத்த தொடங்கலாம்.