Connect with us

தமிழ்நாடு

நான் முழுநேர அரசியலில் ஈடுபட மாட்டேன்: கேள்வி கேட்டவரிடம் கமல்ஹாசன் காட்டம்!

Published

on

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது. சந்தித்த முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளை பெற்று கமல்ஹாசனின் கட்சி அனைத்து அரசியல் கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஐந்து தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று கவனம் ஈர்த்துள்ளது மக்கள் நீதி மய்யம். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் செய்தியாளர் ஒருவர், இத்தனை லட்சம் மக்கள் உங்களை நம்பி வாக்களித்திருக்கிறார்கள். மக்கள் நீதி மய்யத்தின் பொறுப்பு அதிகரித்திருக்கிறது. இனியும் முழு நேர அரசியலில் இல்லாமல் பிக் பாஸ், இந்தியன் என்று டிவி, திரைப்படத்துறைக்கு செல்வது சரியா? என கேள்வி எழுப்பினார்.

இதற்கு கமல், காட்டமாகவும் குரல் உயர்த்தியும் பதில் அளித்தார், நான் முன்பே சொல்லியிருக்கிறேன், அரசியல் என் தொழில் அல்ல. அது என் எக்ஸ்டரா கரிக்குலர் கடமை. நான் டாக்டராக இருந்தால் ஊசி போட்டு சம்பாதிப்பேன். மத்தவங்களுக்கு வைத்தியம் பாத்திருப்பேன். இப்போ எனக்கு தெரிஞ்ச தொழிலில் நேர்மையா சம்பாரிக்கிறேன். அது தப்பு கிடையாது.

அரசியலை முழுசா தொழிலா வச்சுகிட்டாதான் தப்பு. நீங்க ஒரு நல்ல ஆஃபிஸ் கொடுங்க, பொறுப்பு கொடுங்க. கொடுத்து, இதை முழு நேரமா பாருன்னு சொல்லுங்க. அப்போ நான் முழு நேரமா அரசியல் மட்டும் செய்றேன். மக்கள் நீதி மய்யத்தில் யாரும் அரசியலை முழு நேர தொழிலாக செய்ய மாட்டார்கள் என்று தெரிவித்தார் கமல்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?